Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டிஜிட்டல் பணத்துக்கு வலைவிரிக்கும் சைபர் கொள்ளையர்கள்

டிஜிட்டல் பணத்துக்கு வலைவிரிக்கும் சைபர் கொள்ளையர்கள்

கடவுச்சொற்களைத் திருடுவது, ஊழியர்களின் கணினிகளுக்குள் ஊடுருவுவது, மென்பொருள் குறைபாடுகளைப் பயன்படுத்துவது எனப் பல வழிகளில் தாக்குதல் நடத்தப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

கண்ணுக்குத் தெரியாத பணம்; கைகளில் சிக்காத கொள்ளையர்கள்! உலகம் முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோகரன்சிகளைத் திருடுவது மிகப்பெரிய தொழில்நுட்பக் குற்றமாக உருவெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஹேக்கர்கள் நடத்தும் தாக்குதல்கள் இந்த அச்சுறுத்தலை மேலும் அதிகரித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான பைனான்ஸில் (Binance) ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு, கிரிப்டோ உலகையே அதிர வைத்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 6.3 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் பணம் எடுப்பதற்கான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது.

கிரிப்டோ நிறுவனங்கள் ஹேக்கர்களின் முக்கிய இலக்குகளாக உள்ளன. பயனர்களின் ரகசிய கடவுச்சொற்களைத் திருடுவது, ஊழியர்களின் கணினிகளுக்குள் ஊடுருவுவது, மென்பொருள் குறைபாடுகளைப் பயன்படுத்துவது எனப் பல வழிகளில் தாக்குதல் நடத்தப்படுகிறது.

குறிப்பாக, இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஹாட் வாலெட்டுகள் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இணைய இணைப்பின்றி ரகசியச் சாவிகளைப் பாதுகாக்கும் கோல்டு வாலெட்டுகள்கூட தற்போது தப்பவில்லை.

திருடப்பட்ட கிரிப்டோவை உடனடியாகப் பணமாக மாற்றுவது ஹேக்கர்களுக்கு அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், பிளாக்செயினில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் நிரந்தரமாகப் பதிவாகிறது. இதனால் பணத்தின் நகர்வைக் கண்காணிக்க முடியும். இருப்பினும், பல்வேறு டிஜிட்டல் வாலெட்டுகளுக்கு மாற்றுவது, கிரிப்டோ கலவை சேவைகளைப் பயன்படுத்துவது, வேறு கிரிப்டோவாக மாற்றுவது போன்ற வழிகளில் அவர்கள் தடயங்களை மறைக்க முயற்சிக்கின்றனர்.

இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் ஹேக்கர்களின் தாக்குதல் திறனை அதிகரித்துள்ளது. மென்பொருள் குறைபாடுகளைக் கண்டறிவது முதல் போலி மின்னஞ்சல்கள், நம்பகமான நபர்களைப் போன்ற போலி அடையாளங்களை உருவாக்குவது வரை ஏஐ உதவுகிறது.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் மட்டும் 255 சைபர் தாக்குதல்களில் சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ இழப்பு ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் பணத்தின் வளர்ச்சிக்கு இணையாக அதன் பாதுகாப்பும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

முந்தைய செய்தி
ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு ரஷ்யா துணை நிற்கும்: புதின்
அடுத்த செய்தி
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,480 குறைந்தது

தொடர்புடைய செய்திகள்